பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் மன்னாரில் புதிய பஸ் தரிப்பிடம்,சந்தை தொகுதி

மன்னார் மாவட்டத்திற்கான “நிலமெகவர” வேலைத்திட்டம் நேற்று காலை (9) தாராபுரம் பாடசாலையில் இடம்பெற்ற வேலை பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இதன் பொது கருத்து தெரிவித்த அமைச்சர்;

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் நான் சமர்ப்பித்த இரண்டு பத்திரங்கள் எங்களுடைய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய எனக்கு எழுத்துமுலமான கோரிக்கையினை அனுப்பி இருந்தார், பஸ் தரிப்பிடம் மற்றும் சந்தைக் கட்டம் அமைப்பதற்காக நான் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருப்பதன் காரணமாக எனது அமைச்சின் ஊடாக அமைச்சரவை பத்திரத்தை வழங்கி இருந்தேன்.

இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு பஸ் தரிப்பிடத்தையும்,சந்தை கட்டத்தையும் அமைக்க 500மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்ற சந்தோஷமான செய்தியினை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் என தெரிவித்தார்.

Related posts

பாடசாலைகளுக்கு சரியான முறையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை

wpengine

முசலி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எச்.எம்.உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

wpengine

முஜிபுர் ரஹ்மானுக்கு பொதுபல சேனா சவால்

wpengine