பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பற்றி போலியான செய்திகளை வெளியிடும் இணையதளம்,சமுக வலைத்தளம்

– அபூ அஸ்ஜத் –

நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை கொழும்பிலும் வேறு பகுதிகளிலும் மிலேச்சனத்தனமாக நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலினால் நுாற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டும் பலர் காயங்களுக்குள்ளான நிலையில் வேதனையில் இருக்கும் இந்த நேரத்தில் இனவாதத்தின் மூலம் இது போன்ற சம்பவங்களை திரிவுபடுத்தும் இனையத்தளங்களும்,அதற்கு ஊது குழலாக மாறியுள்ள சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானம் மிகவும் அவசியமானதொன்றாகவுள்ளது.

இந்த கொடுர தாக்குதலை இலங்கை முஸ்லிம்கள் வண்மையாக கண்டிக்கின்ற அதே வேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுபாவத்தை தெரிவிப்பது ஒவ்வொரு மனித நேயமிக்கவர்களின் கடமையாகும்.
இந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை எவரும் நியாயப்படுத்தமாட்டார்கள்.

இது போன்று மிலேச்சத்தனமான தாக்குதல்கள் சமூகத்தின் இன நல்லுறவினை பிரிக்கும் ஒன்றாக ஊடகங்கள் செயற்படக் கூடாது.பாதுகாப்பு தரப்பினர் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற இந்த நிலையில் பலர் கைதும் செய்யப்பட்டுமுள்ளனர்.

இந்த நிலையில் JVPNEWS.com என்ற  இணையத்தளம் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற நபரின் புகைப்படம் ஒன்றை பிரசுரித்து,அவருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் தொடர்பு இருப்பதாக வெளியிட்டுள்ள கதையை நாம் வண்மையாக நிராகரிக்கின்றோம்.

தமது அரசியல் தேவைப்பாடுகளுக்காகவும்,சமூகத்தின் ஒற்றுமையினை பிரித்து இதன் மூலம்  தமது இலக்கினை அடையும் மோசமான செயற்பாடுகளின் ஒன்றாகவே இந்த செய்தியினை நாம் பார்க்கின்றோம்.

இந்த நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த நிலையில்,இந்த கோர சம்பவத்தின் பின்னணியினை அரசாங்கம்,பாதுகாப்பு தரப்பு கண்டு பிடித்து கடுமையான தண்டனையினை வழங்க வேண்டும்,அத்துடன் எம்மதத்தின் பெயரிலும்  பயங்கரவாதம் என்பது பயங்கரவாதமே  என்பதை துணிந்து தெரிவித்துள்ள.

அமைச்சரான றிசாத் பதியுதீன்,இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்க முடியாது என்பதையும் இன்று கொழும்பில் பிரதமரின் அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை சில வலைத்தளங்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை 2017 ஆம் ஆண்டு  அவரது அமைச்சில் சந்தித்த வர்த்தக பிரதி நிதிகள் அடங்கிய குழுவில் தெமட்டகொட பகுதியில் கைது செய்யப்பட்ட வர்த்தகரான இப்றாஹிம் அவர்கள் கலந்து கொண்டிருந்த புகைப்படத்தினை மேற்படி இணையத்தளம் வெளியிட்டு இந்த தாக்குதலுடன் அமைச்சர் றிசாத் பதியுதீனை நேரடி சம்பந்தப்பட்டவர் என்று கூறியுள்ளதுடன்,மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தினை இதனுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீனை சமூகத்தில் பிழையான ஒருவராக காண்பிக்க இந்த இணையம் செயற்படுவதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் அவரது அரசியல் வளர்ச்சியில்,அரசாங்கத்தின் ஆட்சிக்கு அவரது நேர்மையான பங்களிப்பினையும்,ஜனநாயக ரீதியான பங்களிப்ப்னையும் தாங்கிக் கொள்ள முடியாத இனவாதிகளும்,மற்றவர்களின் துயரத்தினை வயிறு வளர்க்கும் சில வளைத்தளங்களின் ஊடக விபசாரக் கலாசாரத்தின் உச்ச கட்டமாக இவ்வாறான படுமோசமான அவதுாறுகளும்,புணைக்கதைகளும் பரவ ஆரம்பித்துள்ளன.

பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட ஒருவான அமைச்சர் றிசாத் பதியுதீன் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களும் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றார்.இனத்தால்,மதத்தால் ,பிரதேசத்தால் கடந்து மனித நேயத்துடன் பயணிக்கும் மக்கள் மனதில் தமது சேவைகளை பதித்துள்ள ஒரு தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆவார்.

மன்னார் மண்ணில் பிறந்து தமிழ் மக்களின் துன்ப துயரங்களில் தமது காலத்தினை செலவு செய்த ஒருவர் என்பதை அங்கு மட்டுமல்ல நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இவர் தொடர்பில் நன்றியுடன் நினைவு கூறுவதை நாம் கேட்கின்றோம்.இந்த வளர்ச்சியினை சகித்துக் கொள்ளமுடியாத வங்குரோத்து காரர்கள் மொட்டைத் தலைக்கும்,முழங்காலும் முடிச்சுப் போட்டு மனித நேயமிக்க மக்கள் சேவகனான அமைச்சர் றிசாத் பதியுதீனை  மானபங்கப்படுத்தும் வேளைகளில் இரவு  பகலாக செயற்பட்டுவருகின்றனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நாட்டின் வர்த்தக,வாணிப துறை அமைச்சர்.இவரை சந்தித்து வர்த்தக சமூகத்தினர் தமது பிரச்சிணைகளை எடுத்துக் கூறி,அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள  அமைச்சுக்கு வருகைத்தருவது இயல்பான விடயம்.இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு வர்த்தக சம்மேளனத்தின் கூட்டம்  கடந்த 2017 ஆம் ஆண்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.சீதா செனவிரத்ன,உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன்,கொழும்பு வர்த்தக சம்மேளத்தின் செயலாளர் சூரியர்,பிரதி தலைவர் எஸ்.எம்.சனீர்.சம்மேளனத்தின் தலைவர் இப்றாஹீமும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.

( இது தொடர்பிலான ஊடக அறிக்கை(DailyFT –June 2017 ) இல் வெளிவந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த அறிக்கையில் வெளிவந்த புகைப்படத்தினை மேற்படி JVPNEWS.com பிரசுரித்து அமைச்சர் றிசாத் பதியுதீனை பிழையாக சித்தரித்து சமூகத்திலும்,பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திலும் எதிரான கருத்துக்களை வலிந்து எடுத்து அதன் மூலம் அரசியலை பிழைப்பாக நடத்த முற்படும் முயற்சியாகவே இதனை பார்க்க முடிகின்றது.

இதற்கு முன்னரும்,விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் அமைச்சர் றிசாதிடத்திலும்,அவர் சார்ந்துள்ள இஸ்லாமியர்களிடத்திலும் விற்கப்பட்டதாக புனைக்கதைகள் சோடிக்கப்பட்டு அதனையும் இதே போன்ற வளைத்தளங்கள் முடியுமான வரை ஓய்வின்றி உறக்கமின்றி  பிரசாரம் செய்த போதும்,ஜனநாயகத்தினையும்,சகோதரத்தினையும் விரும்பும் மக்கள் இவர்களை விரட்டியடித்ததை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்,
இப்படியானதொரு மனித நேயத்தினையும்,மக்களது துன்பியல் நிகழ்வகளையும் சந்தர்ப்பமாக கொண்ட சில வளைத்தளங்கள் வசைப்பாடியும்,மக்களது வயிற்றெசிச்கல்களையும் சுமந்து உண்மைத்தகவலை வெளியிடுவதாக கூறுவது,இவர்களே இவர்களது உறவினர்களின் மாமிசத்தை தின்னும் மிருகங்களே அன்றி வேறில்லை என்பதற்கு இந்த பொய்யான செய்தி போதுமானதாகும்,
இவ்வாறான அநாகரிகமாக பொய்களை ஊடகம் என்று கூறி வயிறு வளர்க்கும் சக்திகளை மக்கள் அடையாளம் காண்பதுடன் பொய்யான போலிகளுக்கும் தகுந்த பதிலினை தமது பிரார்த்தனைகள் மூலம் இறைவனிடத்தில் இருந்து அவர்களுக்கு வந்துசேர வேண்டும் என்று இறைஞ்சுவது தான் காலத்தின் தேவையாகும்.

எது எவ்வாறாக இருந்தாலும் இந்த தாக்குதல் சம்பவமானது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதுடன்,தராதரம் பாராது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது உறுதியாகும்.

Related posts

மாட்டிறைச்சியினை கோருபவர்கள் மதுபானசாலை போன்றவற்றைத் தடை செய்யவும் கோர வேண்டும்.

wpengine

துருக்கி இரானுவ புரட்சி! மதகுருக்கு பிடியாணை

wpengine

அரச ஊழியர்களின் வேலை நேரம் 6மணி பிமல் ரத்நாயக்க (பா.உ)

wpengine