பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள அரசியல்வாதிகள்! ராஜபக்ஷ குடும்பத்திற்குள் பல முரண்பாடுகள்

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரினால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கப்படவுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக இதுவரை 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில், நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று மஹந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த 21ம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புடன், அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படுகிறது.

எனினும் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையிலா பிரேரணைக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்குள் பல முரண்பாடுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related posts

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய வர்த்தகமானி அறிவித்தல்

wpengine

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தம்

wpengine

மன்னார் தனியார் பேரூந்தின் உரிமையாளரான விமலதாசன் பலி! மனைவி படுகாயம்

wpengine