பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்காக எழுதுவோர் யதார்த்தவாதிகள்

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
சில முகநூல்களிலும் வட்சப் குழுமங்களிலும் சில நபர்கள், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்காக நியாயமான செய்திகளை எழுதும் ஊடகவியலாளர்களையும் ,எழுத்தாளர்களையும் நோக்கி எழுத்து அம்புகளை எய்வதைக் காணமுடிகிறது.

அமைச்சரிடமிருந்து மஞ்சள் கவர் (பணம்),டிஜிடெல் கமெரா ,லெப்டெப் போன்றவற்றைப் பெற்றுக்கொண்டு தான் அவருக்கு ஆதரவாக செய்திகளை எழுதுகின்றனர்.என்று எவ்வித அடிப்படையுமின்றி ,இறைப்பயமும் இன்றி எழுதுகின்றனர்.இவ்வாறான அபாண்டமான செய்திகளுக்கு விலை கொடுக்கவேண்டி ஏற்படும்.

வன்னிக்குக் கிடைத்த முழுஅதிகாரம் கொண்ட அமைச்சுக்கள் றிசாத் பதியுதீனுக்கே கிடைத்துள்ளது.புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு அவரிடம் இருந்தபோது.சிறப்பான சேவை செய்தமையால் ஐ.நா .வினாக்களிற்கு இலகுவில் விடை இறுக்கக் கூடியதாக இருந்தது.

மகிந்தவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அதே அமைச்சை றிசாதுக்கு வழங்குமாறு நாம் கோரிக்கை விட்டோம்.ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகளால் அது வேறு ஒருவருக்குக் கைமாறியது.பின்னர் கைத்தொழில் வர்த்தக அமைச்சு கிடைத்தது.அவ்வமைச்சு சிறப்பாக செயற்பட்டது.

இதனை சரியாக புரிந்த கொண்ட மைத்திரிபால அரசு அதே அமைச்சை மீண்டும் அவருக்கு வழங்கியது. ஏனைய எந்த ஒரு அமைச்சருக்கும் தாம் வகித்த அமைச்சுக்கள் மீண்டும் வழங்கப்படவில்லை.இதிலிருந்து அமைச்சரின் திறமை,வலிமை,சாணக்கியம் என்பன புரிகிறது. அவர் ஒரு பொறியியல் பட்டதாரி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியால் சிறந்த செயற்றிறன் மிக்க அமைச்சர் வரிசையில் றிசாத் பதியுதீனும் இனங்காணப்பட்டுள்ளார்.எம்மைப் பொறுத்த வரையில் சிறந்த சேவை புரியும் முஸ்லிம் அமைச்சர்கள் வரிசையில் றிசாத் பதியுதீன் அவர்களே முதலிடம் வகிக்கின்றார்.இரண்டாம் இடத்தை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ் பெற்றுக் கொள்கிறார்.ஏனையோருக்கு 3ம்,4ம் இடமே உண்டு.
நிலைமை இப்படி இருக்க, அமைச்சு மாறுகின்றது. றிசாத் பதியுதீனுக்கு தபால் அமைச்சு வழங்கப்படவுள்ளது.

முஸ்லிம் கலாசார அமைச்சு வழங்கப்படவுள்ளது.என்றெல்லாம் மாற்றுக் கட்சிகள் எழுதுகின்றார்கள்.அவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ள வேண்டும். “திறமைமிக்க பொறியியலாளரான இவருக்கு எந்ந அமைச்சு கிடைத்தாலும் அதைச்சிறப்பாகச் செய்யும் ஆற்றல் இவரிடம் நிறையையே உண்டு.” இதற்கு பல சான்றுகள் உள்ளன.

இன்று நாடு பூராகவும் சதோச சிறப்பாக தொழிற்படுகின்றது. புதிது புதிதாக திறக்கப்படுகிறது. கைத்தொழில் வர்த்தக அமைச்சு சிறப்பாக தொழிற்பட்டு வருவதனால் அவ்வமைச்சு மீது பலருக்கு ஒரு விருப்பு உள்ளது என்பது யதார்த்தமாகும்.தமது கட்சி சார்ந்தவருக்கு இவ்வமைச்சு கிடைக்கவில்லை என்ற ஒரு ஆதங்கம் வெளிப்படுகின்றது.

Related posts

11 மற்றும் 12 ஆம் திகதிகளில், அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமானம் !

Maash

China – Sri Lanka Collaborative Project Workshop Reviewing possible causes Kidney Disease

wpengine

ஜெனீவாவில் ரெடியாகும் வியூக அரசியல்!!!

wpengine