பிரதான செய்திகள்

அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

(ஊடகபிரிவு)

பிரபல ஊடகவியலாளரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட இவர், பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, பாணந்துறை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகிய 1 ஏபீ தரப் பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

கல்வி இளமாணி (சிறப்பு), கல்வி முதுமாணி, விசேட கல்வி டிப்ளோமா, விவசாய டிப்ளோமா ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ள இவர், கடந்த 2010 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இலங்கை கல்வி நிர்வாக சேவையிலும் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை என்பனவற்றின் பழைய மாணவராவார்.

 

Related posts

இன்று முதல் ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்

wpengine

உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது

wpengine

சிலாவத்துறை போதனாசிரியர் காரியாலயம் மூடுவிழா! உரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா?

wpengine