பிரதான செய்திகள்

அமைச்சர் பௌசிக்கு வரப்போகும் ஆப்பு! அதாவுல்லா பாராளுமன்ற உறுப்பினர்

அமைச்சர் பௌசியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பதவியிலிருந்து இராஜினமான செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் பௌசியை மேல் மாகாண சபை ஆளுநராக நியமிக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

அமைச்சர் பௌசியின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் எ.எல்.எம் அதாவுல்லாஹ்வை நியமிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து பரவலாக பேசப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் எ.எல்.எம் அதாவுல்லா முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க கூடிய ஒரு பெரும் தலைவர் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் ஊடக பல சேவைகளை செய்தவர் இன மத பேதமின்றி தமது அமைச்சு பணியை முன்னெடுத்த சிறந்த அரசியல்வாதி என போற்றப்படுகின்றார்.

முன்னாள் ‘அமைச்சர் அதாவுல்லாஹ்வின் சேவை நல்லாட்சிக்கு தேவை‘ என்ற காரணத்தினால் நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். என தெரிய வந்துள்ளது.

Related posts

கொழும்பு அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக நிதியாளர் வஹாப்தீன் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி மீளகையளிப்பு

wpengine

இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தமது தாய் நாட்டுக்கு துரோகமிழைத்ததில்லை

wpengine

ஏழைகளின் தோழனாக றிஷாட்டை கண்டேன்….

wpengine