பிரதான செய்திகள்

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில் இல்லை

சுகாதார அமைச்சரின் தற்போதைய நிலை – கணவர் வெளியிட்ட தகவல்

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி IDH வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 23ம் திகதி கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட அவர் ஹிக்கடுவை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) மேலதிக சிகிச்சைக்காக கொத்தலாவை பாதுகாப்பு விஞ்ஞான பிரிவின் வைத்தியசாலைக்கும் அங்கிருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

நேற்று காலை கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஆரம்பமானமைக்கு தனது வாழ்த்துக்களை IDH வைத்தியசாலையில் இருந்து ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில் இல்லை என அவரது கணவர் காஞ்சன ஜயரட்ண குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சர் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Related posts

இரண்டு வாரங்களில் முக்கிய அமைச்சர் கைது செய்யப்படலாம்.

wpengine

கண்டியில் ரிசேட்டி வந்த பிரபாகரன்

wpengine

ஜனாதிபதியின் நிகழ்வில் படு கேவலமாக நடந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்

wpengine