பிரதான செய்திகள்

அமைச்சர் ஒருவரினால் சர்ச்சை! மக்கள் பாதிப்பு

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன விசேட விருந்துபசார நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் திணைக்களத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் விண்ணப்பங்களுடன் நிண்டு கொண்டிருந்தமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் போது விருந்துபசார நிகழ்விற்காகவே தம்மை காக்க வைத்துள்ளனர் என விண்ணப்பதாரிகள் அறியவே அங்கு பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது.

இதேவேளை, மீண்டும் அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு விரைவாக செயற்படுத்துவதில் தொடங்கியதால் அங்கு ஏற்பட்ட பதற்றமான நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

எனினும், இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்துபசார நிகழ்வு குறித்து பல்வேறு விமர்சனங்களை சமூக ஆர்வலர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

Related posts

சஜித் – ரணில் கொழும்பில் இணைவு! மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன முன்மொழிவு .

Maash

மர்ஹூம் அஷ்ரப் மரணம்! திடுக்கிடும் சில உண்மைகள்

wpengine

தன்னை தானே சுட்டுக்கொலை! ராஜிதவிடம் வாக்குமூலம்

wpengine