(எஸ்.எச்.எம்.வாஜித்)
மன்/பதியுதீன் வெள்ளிமலை பாடசாலையின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவும்,புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் மற்றும் கடந்த காலத்தில் பயிற்சி பெற்ற தையல் யுவதிகளுக்கான தையல் இயந்திரம் வழங்கும் வைபகம் நாளை காலை 9மணிக்கு மன்/பதியுதீன் வெள்ளிமலை பாடசாலையில் இடம்பெற விருக்கின்றது.
இச் சிறப்புமிகு வைபகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.