பிரதான செய்திகள்

அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் செய்யப்படும்-ஜனாதிபதி

அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கு பிரதமர் இணங்கியுள்ளதாகவும் அமைச்சரவை மாற்றத்துடன் அமைச்சின் செயலாளர்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதான அமைச்சு ஒன்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சரவை மாற்றத்தின் போது தமது அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்வதை தடுக்க சில அமைச்சர்கள் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தங்களை கொடுப்பதாக தெரியவருகிறது.

இதற்காக முக்கிய அமைச்சர் ஒருவர் மாநாயக்க தேரர்களுக்கு வாகனங்களை அன்பளிப்பு செய்துள்ளதாகவும், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கண்காணிப்பு பதவிகளை வழங்கி, பணத்தையும் சிறப்புரிமைகளையும் வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அமைச்சரொருவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நெருக்கமானவர்களுக்கும் தமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஒப்பந்தங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்- அமீர் அலி

wpengine

இந்த சிறுமிக்கு உதவி செய்வோம்! 8லச்சம் தேவை

wpengine

பல இளம் பெண்களை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது – அவிசாவளையில் சம்பவம்!

Editor