பிரதான செய்திகள்

அமெரிக்காவில் வாழும் பெண்ணை திருமணம் முடித்த ரம்புக்வெல்லவின் புதல்வன்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வரான கிரிக்கெட் வீரர் ரமீத் ரம்புக்வெல்ல திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை பெண்ணான நட்டாலி செனல் என்ற பெண்ணையே ரமித் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

மணமகளின் தாய் அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் உதவி ராஜாங்க செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறி வசித்து வருகின்றனர்.

கொழும்பு காலிமுக திடல் ஹோட்டலில் நடந்த திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அரசியல்வாதிகள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பொலிஸ் அவசர சேவைப் பிரிவு தமிழில்

wpengine

வட மாகாண பொலிஸ் விளையாட்டு போட்டி வவுனியாவில்

wpengine

மாகாண சபை உறுப்பினர் தவத்தின் யோக்கிதத்தை கேள்விக்குட்படுத்தினால் ஊர் சிரிக்கும்.

wpengine