உலகச் செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் இருந்து முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்திய டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்தியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் இறுதி ஆண்டில் காணப்பட்ட மாதாந்திர சராசரியை விட நாடுகடத்தலின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி மற்றும் நிபுணர் ஒருவர், வரும் மாதங்களில் நாடுகடத்தல்கள் அதிகரிக்கும் என்றும், கைதுகள் மற்றும் வெளியேற்றங்களை மேலும் விரைவுபடுத்த டிரம்ப் பாடுபடுவார் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து மில்லியன் கணக்கான சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதாக டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியதாக கூறப்படுகிறது.

அதன்படி, குவாத்தமாலா, எல் சால்வடார், பனாமா மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளிலிருந்து குடியேறிகளை நாடு கடத்துவதற்கும் உதவி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சமையல் எரிவாயுடன் சம்பந்தப்பட்ட 458க்கும் அதிகமான வெடிப்புச் சம்பவங்கள்-சஜித்

wpengine

முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் பொதுபல சேனா

wpengine

YMMA பேரவையின் 66வது மாநாடு இன்று பிரதம அதிதியாக சபாநாயகர்

wpengine