பிரதான செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதிக்கு எதிராக கையொப்பமிட்டுள்ள அமைச்சர் ஹக்கீம்,ராஜித

ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு எதிரான மகஜர் ஒன்றில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட மேலும் சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்தக் கையொப்பமிடும் செயற்பாடு கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மகஜரில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உட்பட மேலும் சிலர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த மகஜர், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அடுத்த மாதம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

Related posts

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை

wpengine

இலவச உம்ரா திட்டம்: 2ஆம் குழு மே முதல் வாரம் மக்கா பயணம்

wpengine

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கம்

wpengine