பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று (13.07.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல்வலிகாமம்-மேற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவுருவச் சிலையின் முன்பாக  இடம்பெற்றது. 


இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல், அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல், மலர்தூவி அஞ்சலி செலுத்தல் என்பன இடம்பெற்று நினைவுரையும் ஆற்றப்பட்டது.

 
மேற்படி அஞ்சலி நிகழ்வில் புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நாவலியூர் கௌரிகாந்தன், முன்னாள் வடமாகாண சபை  உறுப்பினர் பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் கெங்காதரன் உள்ளிட்டோர்   கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

தலைமன்னார் ஆலய சொத்தை கொள்ளையிட முயற்சி! சிலர் மௌனம்

wpengine

3 சட்டமூலங்களின் உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்தர் சபாநாயகர்!

Editor

ஊழல், மோசடிகளை மறைக்கும் சாகல ரத்நாயக்க, விஜேதாச

wpengine