பிரதான செய்திகள்

அப்பாவி மக்களை இலக்கு வைத்து பணம் உழைக்கும்! மன்னார் நகர பிரதேச செயலக நலன்புரிச்சங்கம்! பலர் கண்டனம்

(சுபீயான் அபு )

மன்னார் மாவட்டத்தில் நகர் பகுதியில் வாழும் அப்பாவி மக்களை இலக்கு வைத்து மன்னார் நகர பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்  “அதிஷ்டலாபச்சீட்டு 2017ஆம்” ஆண்டு என்ற சீட்டை வைத்து பணம் உழைக்கும் நடவடிக்கையினை நலன்புரி சங்கம் மேற்கொண்டு வருவதை பிரதேச மக்கள் கண்டனத்தை வெளியீட்டு உள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

குறிப்பாக வரட்சி நிவாரணம்,சமுர்த்தி,வாழ்வாதாரம் பெற்றுக்கொண்ட அப்பாவி மக்களை இலக்கு வைத்து கிராம அதிகாரிகள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலவந்தமான முறையில் ஒவ்வெரு நபர்களும் அதிஷ்டலாபச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வழங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது.

கிராம மட்டத்தில் மூன்று அதிகாரிகள் கடமையாற்றினால் ஒவ்வெரு பயனாளியும் தலா மூன்று டிக்கட்டை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அப்பாவி மக்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் உரிய கணக்கு வழக்கு கூட சரியாக நடைமுறைப்படுவதில்லை எனவும்,கடந்த முறை கூட கணக்கு விடயத்தில் நிர்வாக உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

அப்பாவி மக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை பிரதேச செயலக திருத்த வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அறியமுடிகின்றது.கடந்த முறை கூட சைக்கீல் நிலையத்தை அமைத்துள்ளார்கள் எனவும்,கடந்த மூன்று வருடகாலமாக இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் உரிய உயர் அதிகாரிகள் இதனை தடுத்து அப்பாவி ஏழை மக்களின் வருமானத்தில் விளையாட வேண்டாம் என பிரதேச மக்கள் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்.

இப்படியான முறையில் பணத்தை வசூல் செய்ய பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில்,மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் இன்னும் உரிய திணைக்களத்திடம் அனுமதியினை பெற்றுக்கொண்டார்களா? என சமூக சிந்தனையாளர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளார்கள்.

Related posts

எதிரி தன்னை மட்டும் எழுத்துக்கு சொந்தக்காரனாக ஏலம்விடுபவனே!

wpengine

சமூர்த்தி நிவாரணம் கோரி மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி அம்பாறையில் போராட்டம்!

Editor