பிரதான செய்திகள்

அப்துல் ராசிக்கு எதிராக பொதுபல சேனாவின் வழக்கு! ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பௌத்த மக்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டி சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பில் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இதற்கமைய வழக்கு ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளம்

wpengine

சர்வதேச உலமாக்கள், அறிஞர்கள் மாநாட்டுக்கு இலங்கை சார்பில் ஐந்து உலமாக்கள் பங்கேற்பு

wpengine

Northern Politicos Not Happy

wpengine