கட்டுரைகள்பிரதான செய்திகள்

அன்பின் உங்களுக்கு …! சிந்தித்து முடிவெடுங்கள்.

அப்துல் ரசீக்

புதிய அரசின் பழைய இனவாத அரசியல் வீயூகம் நாளுக்கு நாள் புதிய செய்திகளை நாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலிலான வெற்றி சிறுபான்மைகளை தோற்கடித்து பெற்றுக் கொண்ட வரமாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தை சந்தோஷப்படுத்தி விட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தையும் வெற்றி கொண்டுவிட பகீராத பிரயத்தனங்களும் புதிய கூட்டுகளும் அரசியால் செய்திகளாக தினம் வந்து கொண்டிருக்கிறது.

கட்சியும் சின்னமும் தலைமையும் பங்கு போடப்பட்டாகிலும் எதிர்வாரும் தேர்தலை வெற்றி கொண்டுவிட பெரும்பான்மை தேசிய கட்சிகள் தொடார்ந்தும் முயற்சிக்கிறது.மறு புறத்தில் சிறுபான்மை சமூகங்களையும் கட்சிகளை ஊடறுத்து சமூக அரசியல் பலத்தை சிதைக்கவென அந்தந்த சமூகங்களில் இருந்தே சில கோடாரிக் காம்புகளும் சீவியெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றுவரை சமூகத்தின் உரிமைகளைச் சொல்லி தம்மை பலப்படுத்திக் கொண்டோர் தற்போது பெரும்பான்மை மமதை கொண்டுள்ள தேசிய அணிகளில் இணைந்திருப்பது தன் சமூகத்தின் கழுத்தில் சுருக்கை மாட்டிவிடுவதற்கு ஒப்பானது.

சிங்கள மக்களின் வாக்குகளால் அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியும் எனும் நம்பிக்கைகள் அண்மித்த கால சம்பவங்களால் பலமிழந்து வருகையில் அவர்களுக்கிருக்கும் மாற்று வழி சிறுபான்மைகளின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதேயாகும்.

அதற்காகவே இந்த சமூக விரோதிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

எப்படியும் தாம்மால் சிறுபான்மைகளின் வாக்குகளை பெறமுடியாது என்ற பின் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனரே தவிர சிறுபான்மைகளின் மீதோ வேட்பாளர்கள் மீதோ இருக்கும் கருணையால் அல்ல.

சமூகத்தின் வாக்குப்பலம் சிதைக்கப்பட்டால் இன்னும் பல தசாப்தங்களை வேதனைகளோடு நாமும் சமூகமும் கடக்க வேண்டும் என்பதை சமூகத்தின் எல்லா தரப்புகளும் ஞாபகம் வைத்திருப்பது சிறந்தது.

வடகிழக்கை பொறுத்தவரை அப்பிரதேசங்களின் சகல அபிவிருத்தியும் சமூக அரசியல் பெற்றுத் தந்ததே என்பதை யாரும் மறுக்க முடியாது.ஆனால் தென்பகுதியில் சிறுபான்மை சமூகங்கள் தேசியக் கட்சிகளின் பக்தார்களாகிப் போயிருந்ததால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டதை மிகச் சிறுகாலமாக உணர தலைப்பட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி கடந்த கால இனவாத நெருக்குதல்களில் இருந்து யாராலும் பாதுகாப்பாக வாழ முடியவில்லை.

வேண்டுமென்றே முஸ்லிம் சமூகத்தையும் அவர்களின் மானங்களையும் பகிரங்கமாக ஊடக அனுசரணையோடு திட்டித் தீர்த்தார்கள்.முஸ்லீம் தலைமைகள் வாய்திறக்கும் போது அவர்களையும் விமர்சித்தார்கள்.கைது செய்ய முயற்சித்தார்கள்.இவ்வாறான சூழலை சந்தித்து பாடங்களை கற்றுக் கொண்ட சுயபுத்திகொண்ட எந்த மனிதனும் இன்னமும் போலித் தேசியவாதப் போர்வையை போத்திக் கொள்ளப் போவதில்லை.

ஆகவே … நாம் கடினமாக கடக்க வேண்டிய காலம் நம்மை அண்மிப்பதை உணர்தல் வேண்டும்.

அதே போல் நாம் யாரோடு கைகோர்க்க வேண்டும் என்பதையும் முடிவெடுத்தாக வேண்டும்.

நமக்காக யார் பேசினர்?

நமக்கா யார் செய்தனர்?

என்பது குறித்த மனச்சாட்சியின் ஏடுகளின் பால் நாம் பார்வையை செலுத்தினால்…
அங்கே எனக்கு தெரிவது .

ரிஷாட் பதியுதீன் எனும் பெயரை தவிர வேறோன்றும் இல்லை.
ஆகவே சமூக அக்கறைமிக்க அனைத்து மனிதர்களும் அவாரோடு கராம் கோர்ப்பதே மிகச் சரியான அரசியல் வழிநடாத்தலாக இருக்கும்!

Related posts

ரஷ்ய தூதுவர் சுட்டுக்கொலை (விடியோ)

wpengine

கற்பிட்டிய பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு

wpengine

கல்குடாவில் ஒற்றுமைப்பட்ட சமூகமாக, ஊரோடு ஒத்தோடுகின்ற அனைவரும் செயற்பட வேண்டும்

wpengine