பிரதான செய்திகள்

அனுராதபுரத்தில் வைத்தியா்கள் இருவருக்கு இடையில் மோதல்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியா் ரஞ்சன் கனேகம தெரிவித்துள்ளார்.

கடமைகளின் போது ஏற்பட்ட முறுகல் நிலையால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இரு வைத்தியர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தா்க்கம் அதிகாித்து பின்னர் ஒரு வைத்தியர் மற்றைய வைத்தியரை தாக்கியுள்ளார்.இதில் தாக்குதலுக்குள்ளான வைத்தியர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியா் ரஞ்சன் கனேகம தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்குடன் ,கிழக்கை இணைக்க வேண்டிய எந்த தேவையுமில்லை.-ரிஷாத்

wpengine

காணிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் உறுதிகள் -ஜனாதிபதி

wpengine

ஜனாதிபதியுடன் இந்தியா செல்லும் ஜீவன் தொண்டமான்!

Editor