பிரதான செய்திகள்

அநுர குமார முதல் இடத்திலும்,சஜித் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற செயற்பாடுகளை கண்காணிக்கின்ற இணையத்தளமான
www.manthri.lk புதிய நாடாளுமன்றத்தின் முதல் மாத நிறைவில் வினைத்திறன்மிக்க முறையில் திறமையாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.


இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க முதல் இடத்திலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.


அமைச்சர்களான பந்துல குணவர்த்தன மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் முறையே மூன்றாம், நான்காம் இடங்களிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.


இதேவேளை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் 11வது இடத்திலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் 14வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கி சூடு இளஞ்செழியனை இலக்கு வைத்து அல்ல

wpengine

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் தஹ்வா கருத்தரங்கு!

wpengine

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா கொள்ளை

wpengine