பிரதான செய்திகள்

அத்துரலியே ரதன தேரர் எனக்கு ஒரு தேனீரை கூட வழங்கியதில்லை என ஞானசார தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, அதனை கட்சியிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

6 மாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ரதன தேரர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அது எமது மக்கள் சக்தி கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு. அதேவேளை நான் ஜீப் வண்டியை கொள்வனவு செய்ய அமெரிக்காவில் இருக்கும் வர்த்தகர் ஒருவரே பணத்தை வழங்கினார்.

இதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. ரதன தேரர் அந்த வாகனத்தை எனக்கு வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டி மறுக்கின்றேன். அத்துரலியே ரதன தேரர் எனக்கு ஒரு தேனீரை கூட வழங்கியதில்லை என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு

wpengine

அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பித்த கல்வி அமைச்சர்

wpengine

தாஜுடினைப் போன்று எனது மகனுக்கும் நடந்து இருக்கும் -மேவின் சில்வா

wpengine