பிரதான செய்திகள்

அதிபர்களுக்கு மேலும் பல பொறுப்புகளை வழங்கிய கல்வி அமைச்சு

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அதிபர்கள் ஊடாக சகல மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், வெளி ஆட்கள் பாடசாலைகளுக்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தால் அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களை தடுக்க அதிபர்களுக்கு முடியாவிடின் பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

வவுனியா,வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியின் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட பயனாளிகள்

wpengine

சமூக வலைத்தளத்தில் திருமண மோசடி! பலருக்கு எச்சரிக்கை

wpengine

நுரைச்சோலை அனல் மின்நிலையம், கற்பிட்டி கடற்படை பகுதியில் கமரா

wpengine