பிரதான செய்திகள்

அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் (10கோடி) செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளரும்,மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 25 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டார்.

அங்கு விஜயம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் நிர்மாண வேலைகள் தொடர்பிலும் அதன் ஏனைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும்  வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரிடம் கேட்டு அதற்கான ஆலோசனைகளை வழங்கி வைத்தார்.unnamed-2

குறித்த தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிர்மாணிப்பதற்கும்,அதற்கான சகல வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனம் சுமார் 100 மில்லியன் (10கோடி) ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.unnamed

Related posts

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மன்னாரில் வீட்டுத்திட்டம்

wpengine

அமைச்சர் ஹக்கீமின் தாய் மரணம்

wpengine

நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

wpengine