வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் போன்ற எந்த அரச நிறுவனங்களாக இருந்தாலும் அங்கு இடம்பெறுகின்ற பொது விடயங்களில் அரசியல் ரீதியான பாராபட்சம் காட்டுகின்ற நடைமுறை மாற்றப்பட வேண்டும். இன்று இங்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு எமது பிரதேசத்தைச் சேர்ந்த மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் கௌரவ M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அழைக்கப்படவில்லை என்பது மிகவும் கவலையான விடயமாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ. பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ. ராஜித சேனாரத்ன அவர்களின் அனுசரணையில் காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் ஆயர்வேத வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நோயாளர் தங்கு விடுதியினை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு 2017.02.28ஆந்திகதி-செவ்வாய்க்
இந்நிகழ்விற்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் அழைக்கப்படவில்லை என்பது எனக்கு இறுதிவரை தெரியாத விடமம். இவ்விடயத்திற்கு நான் எனது கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறன செயற்பாடுகள் எமது சமூகத்திலிருந்து முற்றாக இல்லாமல் செய்யப்பட வேண்டும். அரச அதிகாரிகள் அவர்களினுடைய விடயங்களை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமே தவிர அதில் எவ்விதமான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் இருக்கக்கூடாது.