பிரதான செய்திகள்

அதிக வாக்கு வீதங்களை பெற்றுக்கொண்ட முஸ்லிம் பெண்ணை ஏமாற்றிய ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்கிஸ்சை நகர சபை உறுப்பினராக செயற்படும் மாரினா ஆப்தீன் எனும் பெண், கட்சி தலைமையகத்தின் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளார்.

கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை தெஹிவளை கல்கிஸ்சை நகர சபையின் மேயராக நியமிக்கவில்லை என்றால் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டவர் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அதிக வாக்கு வீதங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தினால், சுனேத்ரா ரணசிங்க என்பவரை மேயராக பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் தெஹிவளை – கல்கிஸ்சை நகர சபையில் நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 19 பேரில் 6 பேர் சுனேத்ரா ரணசிங்கவுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொதுநலவாய வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

wpengine

என்னை ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலக அனுமதியுங்கள்! அவசர கடிதம்

wpengine

கரிசல் காணிப்பிரச்சினை மன்னார் ஆயர் உடனான சந்திப்பு

wpengine