செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

அதிக கடன் வாங்கிய மனைவி , உயிரைவிட்ட கணவன் .

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த ம.பாலகிருஷ்ணன் (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார், இதனை அவதானித்த அவரது உறவுகள் இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்

அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Related posts

க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மார்ச் 11 முதல் தடை!

Maash

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஏற்பாட்டில் கோள்ஃபேஸ் ஹோட்டலில் விஷேட இஃப்தார் நிகழ்வு.

Maash

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்.

wpengine