அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை ACMC இல் இணைத்துக்கொண்ட SLMC முன்னாள் போராளிகள் .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். அவர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கப் போவதாகவும் குறிப்பிட்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அரபா வட்டார வேட்பாளர் மற்றும் அல்-முனீறா வட்டார வேட்பாளர்களின் கட்சிக் கிளைக் காரியாலயத்தினை திறந்து வைக்கும் நிகழ்வும், மக்கள் சந்திப்பும் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுத்தீன் முன்னிலையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிகள் இணைந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடந்தகால செயற்பாடுகளில் அதிருப்தியடைத்தே தாங்கள் இவ்வாறானதொரு முடிவினை எடுத்ததாகவும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதிருப்தியடைந்த பலர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

வாகன உரிமையாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு! பொலிஸ்

wpengine

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor

நுரைச்சோலை வீட்டுத் திட்டம்! அதாவுல்லாவும் குற்றப்பரிகாரமும்

wpengine