பிரதான செய்திகள்

‘அடுத்த முதலமைச்சர் தொடர்பில்

எஸ்.ஜெகநாதன்

“அடுத்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சியின் தலைவரான என்னால் முடிவுகளை எடுக்க முடியாது. கட்சியின் செயலாளரே அம்முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என, வட மாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் குரேவிடம் தெரிவித்துள்ளேன் என, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் குரே ஆகியோர் நேற்று  காலை சந்தித்துப்பேசினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில், மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், “வட மாகாண ஆளுநர் விடுத்த அழைப்பின் பிரகாரம் நான் அவரை சந்தித்திருந்தேன்.

“முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக அவர் அழைத்திருந்தார்.

“கட்சியின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன்  மதியம் கலந்தாலோசித்து எடுக்கப்படும் முடிவுகளை அறிவிப்பதாக ஆளுநரிடம் தெரிவித்தேன்” என்றார்.

Related posts

மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் மோதல்! 25 பேர் கைது

wpengine

கைதிகளின் விடுதலை அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை

wpengine

இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம்

wpengine