பிரதான செய்திகள்

அடுத்த மாதம் முதல் பால்மா விலை குறைகிறது!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மா விலைகளை குறைப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

உலக சந்தையில் பால் மா விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவாலும் 400 கிராம் பால் மாவின் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

wpengine

எரிபொருள் நிலையங்களுக்கான நாளாந்த விநியோகம் சாத்தியமற்றது-அமைச்சர் காஞ்சன விஜேசேகர

wpengine

சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த மஹிந்த

wpengine