பிரதான செய்திகள்

அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கும்

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றிக்கான நடவடிக்கையை எடுக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


கண்டியில் வைத்து அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும். 2015ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சி அமைப்போம் எனக் கூறிய போது சிரித்தனர்.

முடிந்ததையே கூறுகிறேன். ஒன்றாக இணைந்து தேசிய கொள்கையின் அடிப்படையில் முன்நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும்.
ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை உடைப்பதற்கு முயற்சிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுpனை உருவாக்கும் முனைப்புக்களில் சில ஊடகங்கள் ஈடுபட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினைகள் தொடர்பில் சந்திக்கு சந்திக்கு சென்று பேசாது விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மை நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுவதில்லை.

கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாது செயற்படுவதற்கே விரும்புவதாகவும் சில ஊடகங்கள் இதனை பூதாகாரமாக்கி வருகின்றது.
ரணில், கரு, சஜித் என அனைவரும் கைகோர்த்து கொண்டு நாங்கள் செய்ய போகிறோம் என்பதை காட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நியூயோர்க் வீதியில் முஸ்லிம் மத தலைவர் சுட்டுக்கொலை

wpengine

மாம்புரி கடற்கரை பகுதியில் கை , கால் இல்லாத நிலையில் சடலம்

wpengine

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி..!

wpengine