பிரதான செய்திகள்

அடிக்கடி மின் விநியோகம் தடை! மக்கள் பாதிப்பு

சமகாலத்தில் இலங்கையின் பல பகுதிகளில் அடிக்கடி மின்விநியோகம் தடை செய்யப்பட்டு வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மின்சார சபையினால் மின்சாரம் தடை செய்வதன் காரணமாக அரச நிறுவனங்களில் சேவை பெற்றுக் கொள்ள வரும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக மோட்டார் வாகன திணைக்களத்திற்கு சென்ற தாம் கடுமையான சிரமங்களுக்கு முகம் கொடுத்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

திணைக்களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக அங்கிருந்த ஜெனரேட்டர் செயலிழந்து காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இது போன்ற பல அரச திணைக்களத்தில் சேவை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுளள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடும் வரட்சியான காலநிலை காரணமாக முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடை செய்யப்படுவதனால் இந்த சிக்கல்களுக்கு தாம் முகம் கொடுப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீர் மின்சார உற்பத்தி செய்யும் இடங்களில் போதுமான மழை இன்மையால் எதிர்வரும் 10 நாட்களுக்கு இவ்வாறு மின்சார தடை தொடரும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஏன் நீக்கப்பட்டார்? ஜனாதிபதி தலையீடு மீண்டும் நியமனம்

wpengine

போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதற்காக கட்டார், ஓமான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

Editor

அல் மினா விளையாட்டு போட்டி! பிரதம அதிதியாக முன்னால் அமைச்சர் (படம்)

wpengine