பிரதான செய்திகள்

அசாத் சாலியிடம் கேட்ட மைத்திரி! முதன்மை வேட்பாளராக

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளராக அசாத் சாலி போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக கொழும்பு முதன்மை ​வேட்பாளராக போட்டியிடுமாறு ஜனாதிபதி தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அசாத் சாலி கூறியுள்ளார்.

எனினும் இது தொடர்பான உத்தியோகபூர் அறிவிப்பு இதுவரை வௌியிடப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட அவர் கொழும்பு மாநகர சபையின் பிரதித் தலைவராக இருந்ததுடன், தற்போது அவர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக இருக்கின்றமை கூறத்தக்கது.

Related posts

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் ..!!! வீடியோ உள்ளே . ..

Maash

கல்வியாண்டுக்கான பாடநூல்களை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

wpengine

சிறுபான்மையினருக்கு எதிராக அல்ல! இராணுவ முகாம்கள் அப்படியே இருக்க வேண்டும்

wpengine