பிரதான செய்திகள்

அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா? என்பது ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டிய விடயம் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவத்தின் பின்னர் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஆரம்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 8 அடி நீளமான தொலைக்காட்சியை நான் கொள்வனவு செய்துள்ள குற்றம் சுமத்தப்படுகிறது.

எனினும் அதில் உண்மையில்லை. புதிய சனசமுக நிலையத்திற்காக ஸ்மார்ட் தொழிற்நுட்பத்துடன் கூடிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

முன்னேறும் உலகத்துடன் நாமும் முன்னேற வேண்டும். 100 முதல் 150 வருடங்கள் முன்னோக்கியவர்களாக நாம் செயற்பட வேண்டும் எனவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டெங்கு ஒழிப்பு! தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை வழமையாக நிலை

wpengine

சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம்! வன்னியில் 18,000 ரூபா

wpengine

இன ,மத மொழி பேதங்களைக் கடந்து சேவை செய்கின்றார் வட மாகாண ஆளுநர்

wpengine