பிரதான செய்திகள்

அங்கஜனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறறு முடிந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனும் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், “அங்கஜனை பிரதி சபாநாயகராக நியமிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பும் வெளியிட்டார்” என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கஜன் இராமநாதன் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டால் , 48 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பதவியைப் பெற்ற தமிழர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண சபை உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு! பயிற்சி வழங்கி பிரயோசனமில்லை

wpengine

பகிரங்க மடலுக்கு அமீர் அலியின் பதில்

wpengine

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்த உதவி ஆணையாளர்

wpengine