பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று பிரதேச சபை மக்களின் பிரச்சினையினை ஹலிம் தீர்ப்பாரா?

(கே.சி.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களான பட்டியடிப்பிட்டி பள்ளிக்குடியிருப்பு , சங்கணிச்சீமை ,பரகத் நகர்,ஆலிம் நகர், இலுக்குச்சேனை ,கிழுறு நகர் , 3ம் கட்டை போன்ற கிராமங்களைச் சேர்ந்தோர், தமது பிரதேச சபைப்பிரதேசத்திற்கு என்று தனியான ஒரு விவாகப் பதிவாளர் நியமிக்கப்படாததை இட்டு பெரும் கவலை கொண்டுள்ளனர்.


இப்பிரதேச சபை விவாகப்பதிவாளருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் , அம்பாறைக் கச்சேரியிலும் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு ஏறத்தாழ 07 மாதங்கள் கழிந்தும் நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

நல்லாட்சி நடைபெறும் இக்காலத்தில் முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் அவர்கள துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

மடு கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தின் அவல நிலை – மக்கள் விசனம்

wpengine

மன்னார் நகரசபை தலைவருக்கு எதிராக முசலி பிரதேசபையில் கண்டனத்தீர்மானம்.

wpengine

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளனர்

wpengine