பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று கோட்டத்திற்கான புதிய கல்விப்பணிப்பாளர்! தீடீர் விஜயம்

(கே.சி.எம்.அஸ்ஹர்)

24.10.2017 ஆகிய நேற்று  அக்கரைப்பற்றின் புதிய வலயக்கல்விப்பணிப்பாளர் அஹமட் வெல்வை அவர்கள் அட்டாளைச்சேனை கோட்டத்தில் உள்ள அக்ஃஅல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது பாடசாலை பௌதீக வளம் ,ஆளனி வளம் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக பாடசாலை முகாமைத்துவ குழுவனருடனும் , பாடசாலை, பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினார்.

அதிபர் எம்.எ.எம்.றஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் ஏ.பி.கபூர் ஹாஜியார்,கலாநிதி ஏ.ஜீ.அனீஸ்,எம்.எ.சபுஹர் போன்றோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வலயக் கல்விப்பணிப்பாளர் ,பாடாலையின் நிருவாகம், கவின் நிலை, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் போன்றவற்றைப் பாராட்டிப் பேசினார்.மேலும் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பித்தல்,தரம் 05 புலமைப்பரிசில் பெறுபேற்றை மேம்படுத்தல் க.பொ.த.(சா-த) ,(உ-த) அடைவு மட்டத்தை உயர்த்தல், வாகன தரப்பிடத்தை அமைத்தல் தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கியதுடன் பாடசாலை தேவைகளை விரைவில் பூர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

வலயக்கல்விப் பணிப்பாளரின் முதல் பாடசாலை தரிசிப்பாக இது அமைந்திருந்தது. பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திக் குழு போன்றோரின் மிகவும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் நடைபெற்ற சிறந்த சந்திப்பாக இது அமைந்திருந்தது.

Related posts

வவுனியா வெங்கள செட்டிகுளம் பிரதேச சபையின் பிரதி தலைவர் ஐக்கிய தேசிய கட்சி வசம்

wpengine

புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை றிப்கான் நிராகரிப்பு; அவகாசம் கோரல்!

wpengine

ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள்

wpengine