பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்து போட்டி

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் இணைந்தும் களமிறங்குகின்றது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதுடன், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக்கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும் ஒட்டுமொத்தமாக 07 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.


வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முதன்மை வேட்பாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முதன்மை வேட்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் முதன்மை வேட்பாளராகவும், அம்பாறை மாவட்டத்தில் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

Related posts

ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருட தடை விதிப்பு

wpengine

சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை

wpengine

16 வருடங்களுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

Maash