அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பிரான்ஸ் அகதிகள் , குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், ACMC பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு .!

பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கொழும்பில் இடம் பெற்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்படி அமைப்பின் பிரதிநிதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது, இலங்கையிலிருந்து பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்கு பயணிக்கும் அகதிகளின் நிலைமை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தரப்புக்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Related posts

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும்

wpengine

சோள இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வியாபார பண்ட வரி நீக்கம்!

Editor

ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்! கோத்தா

wpengine