Breaking
Mon. Nov 25th, 2024

இணைய இணைப்பின் ஊடாக நண்பர்களுடன் பேசி மகிழ்வது மட்டுமின்றி அனைத்து வகையான கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரக்கூடிய அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் அப் காணப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் சுமார் 19 பில்லியன் டொலர்கள் செலுத்தி கொள்வனவு செய்திருந்தது.

இதன் பின்னர் அசுர வளர்ச்சி கண்ட வாட்ஸ் அப் ஆனது பல மில்லியன் கணக்கான பயனர்களை தற்போது கொண்டுள்ளது.

இதேவேளை வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தரவுகள், தகவல்கள் தொடர்பில் பல நம்பிக்கையின்மைகள் அண்மைக் காலங்களில் வெளிவந்தவண்ணம் இருந்தன.

இப்படியான ஒரு தருணத்தில் மற்றுமொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதாவது வாட்ஸ் அப்பில் தரப்பட்டுள்ள பயனர் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக் தளத்துடன் நேரடியாக பகிரப்படவுள்ளது.

பேஸ்புக் ஆனது தனது விளம்பர சேவையை விரிவுபடுத்தும் முகமாக தொலைபேசி இலக்கங்கள் உட்பட சில தகவல்களை இவ்வாறு வாட்ஸ் அப்பிலிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளது.

இதன் காரணமாக பேஸ்புக்கில் தமது தகவல்களை மறைத்து வைத்துள்ள பயனர்களுக்கு இப் புதிய வசதி சில சமயங்களில் தலைவலியை தரக்கூடும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *