வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் முகாமையாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான இர்பான் மொஹமட் அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் விபத்தில் சிக்கி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பிந்திய நிலைவரத்தை இங்கு பதிவிடுகிறேன்.
இர்பானின் தலையில் பாாரிய காயம் ஒன்று ஏற்பட்டிருந்த நிலையில் உடனடியாக அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வேறு ஏதும் பாதிப்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் அவரது தலைப் பகுதி எம். ஆர். ஐ ஸ்கேன் செய்யப்பட்டவுள்ளது.
மேலும், அவரது உடம்பின் சில இடங்களில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவரது நாக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பை தம்புள்ள வைத்தியசாலையிலேயே தைக்க முடியுமென டாக்டர்ககள் தெரிவித்துள்ளனர்.
தன்னைப் பார்வையிட வருவோருடன் சாதாரணமாக உரையாடக் கூடிய நிலையிலே அவர் உள்ளார்.
மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவரைக் கொழும்புக்கு, அல்லது கண்டிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அவரது மனைவிக்கு தலையில் சிறியதொரு காயம் ஏற்பட்டுள்ளது. அது பாரதூரமாக இல்லை. அவரது பிள்ளைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சியின் அதிகாரிகள் குழுவொன்று தற்போது தம்புள்ளை சென்று கொண்டிருக்கிறது.
சம்பவம் நடந்தது இப்படித்தான்!
———————————————————-
வைபவம ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த போது இர்பானால் செலுத்தப்பட்ட கார் மின்சாரக் கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. மிக வேகமாகப் பயணித்த நிலையில் குறித்த கார் மின்சாரக் கம்பத்தில் மோதியதால் மின்சாரக் கம்பமே இரண்டாக உடைந்து தொங்கியதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் தம்புள்ளை வைத்தியசாலையை தொடர்பு கொண்டு நான் கேட்ட போது, காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் போது அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.