பிரதான செய்திகள்

Update அதிகாலை யானை தாக்குதல் மீண்டும் ஒரு சிறுமி மரணம்

புத்தளம் – அநுராதபுரம் வீதியின் மீஒயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.


இன்று அதிகாலை 2.20 அளவில், சிற்றூர்தி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது
இவ்வாறு காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 11 பேர் காயமடைந்து புத்தளம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 1 உயிரிழந்து இருந்தார். இந் நிலையில் இந்த காட்டு யானை தாக்குதலில் தற்போது இந்த குழந்தையுடன் சேர்த்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

Related posts

அரசியல் ரீதியாக வட்டார வாதம்! ஒருவரை ஒருவர் எதிரியாக பார்க்கும் நிலை

wpengine

கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மன்னார் மாவட்டம்!

Editor

கிழக்கை குறிப்பாக மட்டக்களப்பை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை

wpengine