மறைந்த தலைவா் எம்.எச்.எம். அஸ்ரப் அவா்களினால் 20 வருடங்களுக்கு முன் இந் நிலையம் கல்கிசையிலும் ஒரு கற்கை பயிற்சி நிலையம் அன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் குவைத் நாட்டின் துாதுவராகவும் கடமையாற்றிய ஏ. ஆர். மன்சூா் அவா்கள் காலத்தில் இப் பல்கலைக்கழககத்திற்கு நிதி பெறப்பட்டது.
அதன் நிமித்தமே இக் கட்டிடத்தினை மீள நிர்மாணிப்பதற்கு குவைத் அரசாங்கம் 64.85 மில்லியன் ருபாவை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதற்கு உதவிய முன்னாள் உபவேந்தா்களுக்கும் பேராசிரியா் நாஜீம் பல்கலைக்கழகம் சாா்பாக நன்றிகளைத் தெரிவித்தாா்.
மறைந்த அமைச்சா் எம்.எச்.எம். அஸ்ரப் அவா்களின் என்னக் கருவில் உருவான இந்த தென் கிழக்கு பல்கலைக்கழகம் தற்பொழுது தேசிய பல்லைக்கழகங்கள் 17 உடன் சோ்ந்து உயா் கல்வித்துறையில் பாறிய சேவையைச் செய்து வருகின்றது.
தற்பொழுது ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு பல்கழைக்கழகமும் பட்டதாரிகளை அனுமதி வழங்கும் போது 10 வீதமாக அதிகாரிததால் 2020ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் உள்ள 17 பலக்கலைக்கழகங்களும் 35ஆயிரம் மாணவா்காள அதிகரிக்க முடியும். ஒரு வருடத்தில் 120 மாணவா்களை அதிகரித்தல் வேண்டும். ஆனால் எமது நாட்டில் உயா்தரப்பரீட்சையை ஆகஸ்டில் எழுதி விட்டு பல்கலைக்கழக செல்லும் வரை மாணவா்கள் ஒன்றரை வருடம் காலத்தினை வீனாடிக்கின்றாா்கள்.
அத்துடன் பல்கலைக்கழககங்களினது தரமான கல்வியை பரீசீலிப்பதற்கு வெளிநாட்டு கல்வியலாளா்களினால் திட்டம் வகுக்கப்படுகின்றது. அத்துடன் புதிய என்.வி.கி.டெக் பல்கலைக்கழகம மூலம் தரம் 5 ., பட்டப்படிப்பு தரம் 6 விசேட பட்டம் தரம் 12 வரை பி.எச்.டி .படிப்பை பயிலக் கூடிய சா்ந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.