Breaking
Mon. Nov 25th, 2024

(அஸீம் கிலாப்தீன்) 

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) 2017 மார்ச் 16 முதல் ஏப்ரல் 4 வரை “டெங்கு ஒழிப்பு  விழிப்புணர்வு வாரமாக” பிரகடனப்படுத்தி இருந்தது. அந்த வகையில்  தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்று 2017 04 09 ரியாளுஸ் சாலிகீன் மார்க்க கல்வி கூடம் மற்றும்  SLTJ  நேகம கிளை இணைந்து டெங்கு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி! ஒன்றை ஏற்பாடு செய்ய பட்டது.

Ø  நீர் தேங்கி நிக்கும் இடங்களை மூடி விடவும்

Ø  பூ சாடிகளில் தேங்கி இருக்கும் நீரை அகற்றவும்

Ø  டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்

Ø  உயிர் கொல்லி நோயான டெங்குவை ஒழிப்போம்

Ø  கொடிய நோய்களில் இருந்து எம்மை பாதுகாப்போம்

Ø  உயிர் பலிகளை தவிர்ப்போம்

Ø  நாடும் நாமும் நலமுடன் வாழ அனைவரும் ஒன்றாய் உழைத்திடுவோம்

Ø  சூழலை சுத்தமாக வைத்திருப்போம்

Ø  கொடிய நுளம்பில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்

Ø  குப்பை கூளங்களை அகற்றுவோம்

Ø  தகரப் பேணிகளையும் சிரட்டைகளையும் குழி தோண்டி புதைப்போம்

 

என்ற பதாகைகளை தூக்கிய வண்ணம் நேகம புகையிரத நிலையம் முதல் நேகம முஸ்லீம் மாகா வித்தியாலயம் வரை நடை பவனியாக சென்று மக்களை விழிப்புணர்வு செய்யதனர் இன் நிகழ்வில் கல்னேவபொலிஸ் அதிகாரிகள்  சுகாதார பரிசோதனை அதிகாரி அஜித் உள்ளிட்ட குழுவினர்  மற்றும் SLTJ  நேகம கிளை நிருவாகிகள் ரியாளுஸ் சாலிகீன் மார்க்க கல்வி கூட பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு செய்தனர்  நன்றி தெரிவித்த சுகாதார பரிசோதனை அதிகாரி அஜித் உண்மையில் நேகம கிராமதுக்கு டெங்கு விழிப்புணர்வு செய்வது கட்டாயமாகும் இக் கிராமத்துக்கு பக்கத்தில் இருக்கும் இரு கிராமங்களிலும் ஒருவர் வீதமும் இந்த கொடிய நோயினால் பாத்திக்கப்பட்டு உள்ளனர்.

எமது MOH இல் இது வரைக்கும் 35 பேர் இந்த கொடிய நோயினால் பாத்திக்கப்பட்டு உள்ளனர் இதை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தின் டெங்குவினால் பாதிக்கட்டட்ட முழுத்தொகையுடன் அதிகமாக உள்ளது   இந்த ஊர் எந்த நேரத்திலும் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்படலாம்    இப் பிரதேசத்தில் சிறுவர்கள் ஆகிய நீங்கள் இந்த கொடிய நோய் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு இருப்பதை இட்டு நான் மகிழ்சசி அடைகிறேன் அதிகமான பிரதேசங்களில் நாங்கள் இல்லாவிட்டால் பொலிஸ் நிலைய அதிகாரிகள் போன்றவர்கள் தான் இவ்வாறான  நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது ஆனால் மாறாக சின்ன சிறார்கள் நீங்கள் இது போன்ற பொது சேவைகளில் ஈடுபடுவது பாராட வேண்டிய ஒன்றாகும் அத்துடன் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு உருவாக்கும் விதம் அதை எவ்வாறு தடுக்கலாம் என்ற விழிப்புணர்வும் வழங்பட்டது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *