கட்டுரைகள்பிரதான செய்திகள்

SLMC & ACMC எம்.பிக்கள் இன்று இனவாதியுடன் யார் இந்த உதயகமன்வில?



✅ ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் – குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களை கொன்று அவர்களது உடமைகளை எரித்து நாசமாக்கிய கலவரத்தின் பிரதான சூத்திரதாரியான மதுமாதவ அரவிந்தவின் தலைவர் உதயகமன்வில.


✅ முஸ்லிம்கள் தமது சனத்தொகையை பெருக்குவதன் மூலம் 2050யில் இலங்கையை பிடிக்கப்போகிறார்கள் என அடிப்படையே இல்லாமல் – சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தீண்டியவர் உதயகமன்வில.


✅ ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் – ஒட்டு மொத்த அப்பாவி முஸ்லிம் சமூகத்தையும் – பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதில் – மிகத்தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் இந்த உதய கமன்வில.
✅ சகோ. றிசாட் பதியுடீனை கைது செய்ய வேண்டும் என முதன்முதலில் கூறியவர் இந்த உதய கமன்வில.


✅ சகோ. றிசாட் பதியுடீன் தான் கைது செய்யப்படாமல் தடுக்க மறைந்திருந்த போது – குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களை கொன்று அவர்களது உடமைகளை எரித்து நாசமாக்கிய கலவரத்தின் பிரதான சூத்திரதாரியான மதுமாதவ அரவிந்தவை – இப்படித்தான் நாங்களும் பொலிஸாரிடமிருந்து பாதுகாக்க மறைத்து வைத்திருந்தோமென – பகிரங்கமாக ஊடகவியலாளர்களிடம் கூறியவர் இந்த உதய கமன்வில.


✅ மத்ரசாக்கள் அடிப்படைவாதத்தை பயிற்றுவிக்கும் பயங்கரவாதிகளின் முகாம் என்பதால் – அவற்றை இழுத்து மூட வேண்டும் என தீவிரமாக பிரச்சாரம் செய்த முதன்மையானவர்களில் ஒருவர் உதய கமன்வில.

👉🏿 இப்படிப்பட்டவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக – உண்மையான சமூக உணர்வுள்ள முஸ்லிம் எம்.பிக்கள் இன்று வாக்களிக்க வேண்டும்.


👉🏿 ஆனால், SLMC & ACMC யின் 20க்கு கையுயர்த்திய எம்.பிக்கள் – நேற்று பிரதமரை சந்தித்து – உதய கமன்விலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அவரை காப்பாற்றுவோம் என வாக்குறுதியளித்திருப்பதாக ஊடகங்களூடாக அறியக்கிடைக்கின்றது.


👉🏿 ஆகக்குறைந்தது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விடுவோம் என்றும் கூறவில்லை; மாறாக, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்.

இப்போது புரிகிறதா…இவர்கள் கட்சியோடுமில்லை; சமூகத்தோடுமில்லை.
பக்கா அரச விசுவாசிகள்.
கட்சியோடு இருப்பதாக நடிக்கிறார்கள்…மீண்டும் எம்.பியாக.

Related posts

வவுனியாவில் புகையிரத கடவை அமைக்க கோரி மகஜர்

wpengine

பொதுபல சேனாவின் வலைக்குள் அகப்பட வேண்டாம்! வவுனியாவில் றிசாட்

wpengine

வவுனியாவில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதி!

Editor