பிரதான செய்திகள்

QR முறை மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளது.

QR முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள மக்களுக்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத் திட்டத்தை வழங்குவதைத் தவிர, QR முறையானது தேசிய சேமிப்பிற்கும் வழிவகுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆறு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் தற்போது தேசிய எரிபொருள் உரிமத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடு  முழுவதும் உள்ள 93% எரிபொருள் நிலையங்கள் இந்த QR முறையைப் பயன்படுத்துவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

குர்ஆனை தடைசெய்யும் பேச்சுவார்த்தையில் பொது­ப­ல­சேனா மற்றும் சிங்­கள ராவய

wpengine

விவசாயத்துறையில் மாற்றம்! 3போக பயிர் செய்கை

wpengine

தயா கமகேயின் இனவாதத்தை வேடிக்கை பார்க்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்

wpengine