பிரதான செய்திகள்

QR முறை மாவட்டத்தில் ஒரு பெற்றோல் நிலையம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், இன்றும் இது ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் தசுன் ஹகொட மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த முன்னோடித் திட்டத்தை நாடு முழுவதும் பல கட்டங்களாக விரிவுபடுத்துவதே எமது நோக்கம். இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் இத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம். மேலும், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டத்தை நடத்தினோம். இதில் பெறப்பட்ட தகவல்களை கணினியில் உள்ளிட்டு அடுத்த சில நாட்களில் இந்த முறையை செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்.”

Related posts

சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து அதாவுல்லா மக்களை ஏமாற்றி வருகின்றார்-ஏ.சி.யஹியாகான்

wpengine

இரண்டு வாரங்களுக்கு திருமணம் நடாத்த தடை! திங்கள் அமூல்

wpengine

விசாரணை இல்லாமல் அனுர சேனாநாயக்க

wpengine