உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பள்ளி மாணவிகள் உடை மாற்றும் போது ரகசியமாக வீடியோ

சுவிஸ் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர், பள்ளி மாணவிகள் உடை மாற்றும்போதும் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும் ஷவரில் குளிக்கும்போதும் ரகசியமாக வீடியோ எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் 80 மாணவிகளை படம் பிடித்ததை அவர் வீடியோவாக பதிவும் செய்துள்ளார். அந்த 21 வயது கால்பந்து பயிற்சியாளர், குறைந்தது ஐந்து பள்ளிகளின் மாணவிகளை Lucerneஇலுள்ள நீச்சல் குளம் ஒன்றில் வீடியோ எடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர், நீச்சல் குளத்திற்கு செல்வதற்காக மாணவிகள் உடை மாற்றும் அறையிலும், நீந்துவதற்கு முன்னும் பின்னும் ஷவரில் குளிக்கும்போதும், நீச்சல் குளத்தில் நீந்தும்போதும், கெமராக்களை மறைத்து வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோக்களிலுள்ள ஐந்து பள்ளிகளின் மாணவிகள் வீடியோக்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த ஒரு மாணவி அந்த பயிற்சியாளர் தனது செல் போனை மறைத்து வைத்து போட்டோ எடுப்பதைக் கண்டு அதைப் பறித்து நீச்சல் குளத்தின் காசாளரிடம் கையளித்துள்ளார்.

பின்னர் தான் புகைப்படங்கள் எடுத்ததையும் அவற்றை வீடியோவாக்கியதையும் அந்த பயிற்சியாளர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் தனது பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதோடு, அந்த பகுதியில் நடைபெறும் விளையாட்டு தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, தான் தயாரித்த வீடியோக்களை அவர் இணையத்தில் பகிரவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

அன்சார் தாக்குதல்! அரசிடம் நேரில் கண்டனத்தை தெரிவித்த அமைச்சர் றிஷாத்

wpengine

வடக்கு – கிழக்கு இணைப்பில் சமூகக்கட்சி என்று கூறுவோர் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர். அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு!

wpengine

சமூக வலைத்தளங்கள் மீதான தடை மக்கள் மத்தியில் சந்தேகம் மஹிந்த

wpengine