பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

PLOTE கட்சி வன்னியிலும்,யாழ்ப்பாணத்திலும் போட்டி

PLOTE எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடவுள்ள சில வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

எனினும், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் வேட்பாளர் நியமனத்தில் இழுபறி நிலை தொடர்கின்றது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனும் களமிறங்கவுள்ளனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் G.T.லிங்கநாதனும் க.சிவலிங்கமும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை வேட்பாளர் தெரிவு பூர்த்தியாகவில்லை எனவும் PLOTE இன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தலா ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கான ஆசன ஒதுக்கீடு காணப்படுகின்ற போதிலும் இந்த மாவட்டங்களில் களமிறங்குவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

Related posts

சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை!

Editor

வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் இடித்து அழிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

wpengine

சற்றுமுன்பு மறியல் போராட்டகாரர்களால் ஹுனைஸ் எம்.பி விரட்டியடிப்பு

wpengine