செய்திகள்பிரதான செய்திகள்

NPP உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நூருல் ஹூதா – அஷ்ரப் தாஹிர் MP கண்டனம்.

தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளமை குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கண்டனமொன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று இரவு (11) கல்முனையிலிருந்து மாளிகைக்காட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான சிலர் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் காரைதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

வேகமாக உடனுக்குடன் செய்திகள் மற்றும் ஆய்வு கட்டுரைகள் எழுதும் ஆற்றல் கொண்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் பிரபல சமூக செயற்பாட்டாளராகவும், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விரோத செயல்களை துணிந்து கேள்விக்குட்படுத்தி செய்திகள் எழுதி, ஆய்வு கட்டுரைகள் எழுதி வந்த இவர் மீதான தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சமீபத்தைய நாட்களில் செயற்பாட்டு ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்துவதும் வாடிக்கையாகி வருவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக் வருவதாகவும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

-ஊடகப் பிரிவு

Related posts

ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவர் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ள

wpengine

26 வயது யுவதியை பலாத்காரம செய்ய காட்டுக்குள் இழுத்து சென்று கொலை செய்த 16 வயது சிறுவன்.

Maash

சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்த விபத்து, முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 9 பேர் பயணம் .

Maash