பிரதான செய்திகள்

NFGG இரட்டைக்கொடி சின்னத்தில் தனித்தே போட்டியிடும்

(NFGG ஊடகப் பிரிவு)

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG), தமது சின்னமான இரட்டைக் கொடி சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதென கட்சியின் தலைமைத்துவ சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

சமீபத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்கு இரட்டைக் கொடி சின்னமும் வழங்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இந்தப் பின்புலத்தில் புதன்கிழமையன்று (29.11.2017) கொழும்பில் கூடிய கட்சியின் தலைமைத்துவ சபை இது தொடர்பான மேலுள்ள இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தற்போது பல்வேறு சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தயார் செய்யும் பணிகளில் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Related posts

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

wpengine

பிரதமர் வேட்பாளராக ரணில்

wpengine

இனவாதிகளின் இலக்காக இருந்த டொக்டர் ஷாபி சஹாப்தீன்! ஏன் கைது செய்யப்பட்டார்.

wpengine