தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

Multi Knowledge இனது புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

MBNSOFT நிறுவனத்தின் மூலம் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவார்ந்த மென்பொருளான Multi Knowledge யின் புதிய பதிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. முதற்பதிப்பு நிறுத்தப்பட்டு புதிய பதிப்பு  மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்திலும் பலமடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான பொதுச் சாதாரணப் பரீட்சைக்குரிய எதிர்பார்க்கை வினாக்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்குரிய போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு, பொது உளச்சார்பு, நுண்ணறிவு போன்ற வினாக்கள் விடைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை இம்மென்பொருளை Download செய்யாதவர்கள் Google Play Store யில் Multi Knowledge என Type செய்து  Download செய்ய  முடியும். ஏற்கனவே Download  செய்தவர்கள் Google Play Store யில் Multi Knowledgeயிற்குச் சென்று Update செய்ய முடியும். Multi Knowledge மென்பொருள் பாவனையாளர்களது பூரண ஒத்துழைப்பு, இம்மென்பொருளை மேலும் சிறப்பாக வழிநடாத்திச் செல்ல முடியும். அத்துடன் Multi Knowledge பரிசுப்போட்டியிற்க்கான வினாக்கள் இவ்வார இறுதியில் வெளியிடப்படும்.

குறிப்பிட்ட மென்பொருள் அம்பாறை மாவட்டத்தின்  சம்மாந்துறையைச் சேர்ந்த MB. நஷாட் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் மொழிமூலம் கல்விசார் நடவடிக்கைக்காக தயாரிக்கப்பட்ட எமது நாட்டின் முதலாவது மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://play.google.com/store/apps/details?id=com.mbnsoft.multiknowledge

 

Related posts

தமிழ் மக்களின் பிரச்சினையினை தீர்வுகாண புதிய பாராளுமன்றம் கூட்ட வேண்டும்

wpengine

ஐரோப்பிய நாடுகளில் முட்டையில் கலப்படம்

wpengine

மாட்டிக்கொண்டு மைத்திரியிடம் கெஞ்சிய கொலைகார கருணா

wpengine